Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் செயல்படத் தொடங்கிய இபதிவு இணையதளம்.!

இன்று முதல் 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காலையில் பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் இபதிவு இணையதளத்தை பயன்படுத்தியதால் அந்த தளம் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

மீண்டும் செயல்படத் தொடங்கிய இபதிவு இணையதளம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  7 Jun 2021 6:07 PM IST

இன்று முதல் 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காலையில் பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் இபதிவு இணையதளத்தை பயன்படுத்தியதால் அந்த தளம் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே 27 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வந்த காரணத்தினால், அந்த மாவட்டங்களில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே இன்று காலை முதல் புதிய தளர்வுகள் வந்தது. அதன்படி எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இ பதிவு கட்டாயம் என கூறப்பட்டது.

இதன் காரணமாக பலர் இபதிவு இணையதளத்தில் பயன்படுத்த தொடங்கினர். இதனால் அதன் தளம் இன்று மாலை வரை முடங்கியது. தற்போது தளம் சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News