மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்க முடியாது.. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.!
திமுக அரசு அமைந்த பின்னர் மக்கள் அனைத்திலும் சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா சமயத்தில் மின் கட்டணத்தை கூட உடனடியாக கட்டச்சொல்லி துன்புறுத்துவது மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல லட்சம் மக்கள் தமிழகத்தில் வேலை இழந்து உள்ளனர். இதனால் தினமும் சாப்பிடுவதற்கே கஷ்டப்பட்டு வரும் நிலையில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கெடுபிடி காட்டி வருவது சாதாரண பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இது போன்ற சமயங்களில் வேலை இழந்து அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். தற்போது மின்சார கட்டணம் உடனடியாக செலுத்த வேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் இனி மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் இனி மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.