சட்டமன்ற தேர்தல் எதிரொலி.. சென்னையில் ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி.. சென்னையில் ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!
By : Kathir Webdesk
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் முன்கூட்டியே காவல்துறை சில வேலைகளை செய்து வருகிறது. அதில் ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் சுமார் 475 வாக்குசாவடிகள் பதற்றமானவையாகவும், 157 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதே போன்று கடந்த தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி இருப்பினும், பிரச்சனை ஏற்பட்டு மறுவாக்குபதிவு செய்யப்பட்டிருந்தாலும், பதற்றமான வாக்குசாவடிகளாக கருதப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம் மற்றும் மோதல் ஏற்படக்கூடிய, மற்றும் ரவுடி கும்பல செயல்படும் இடங்களில் உள்ள வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அளித்த பேட்டியில்: சட்டமன்ற தேர்தலையொட்டி ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் ரவுடிகளின் பட்டியலை கணக்கெடுத்து அவர்களை தேர்தலுக்கு முன்னரே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.