தொடர் மழை எதிரொலி.. குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.!
தொடர் மழை எதிரொலி.. குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.!
By : Kathir Webdesk
கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. தென்காசி மாவட்டம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. அதே போன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக யாரும் குளிக்க அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை மீறி தண்ணீர் கொட்டுகிறது. அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.