மழை எதிரொலி.. கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு.!
மழை எதிரொலி.. கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய், தற்போது 90 ஆக அதிகரித்துள்ளது. குடை மிளகாய் 30லிருந்து 50 ரூபாயாகவும், கத்தரிக்காய் 25 லிருந்து ரூ.60 ஆகவும், பீன்ஸ் 20லிருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளது. தொடர் மழை மற்றும் நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வார விடுமுறை என்பதாலும் காய்கறிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்ததால். காய்கறி தோட்டங்களை முற்றிலும் வெள்ளம் சூழ்ந்து விட்டது. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.
அதுமட்டுமின்றி புயல் காரணமாக மக்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை ஏற்கனவே சேமித்து வைத்து விட்டனர். இதனால் காய்கறிகளின் இருப்பு குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் காற்கறிகளின் விலை தொடர்ந்து இதே போன்று இருக்காது. ஓரிரு நாளில் இந்த விலை ஏற்றம் சாதாரண நிலைக்கு வந்து விடும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.