Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் எதிரொலி.. திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு.!

தேர்தல் எதிரொலி.. திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு.!

தேர்தல் எதிரொலி.. திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Dec 2020 4:52 PM GMT

2021ம் ஆண்டு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணி திருச்சியில் இன்று தொடங்கியது.

சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, லால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய 9 தொகுதிகள் உள்ளது. இந்த 9 தொகுதிகளிலும் மொத்தம் 3,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

பேரவைத் தேர்தலில் திருச்சியில் 9 தொகுதிகளிலும் 5,686 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,341 கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் 4,686 கருவிகள் பயன்படுத்தப்படும்.
எஞ்சியவையும் கடந்த சில நாட்களுக்கு முன் வரப் பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்கெனவே உள்ள பதிவுகளை அழிப்பது மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வது ஆகிய பணிகள் இன்று (டிசம்பர்) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் பொறியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News