தடுப்பூசி வதந்தியை பரப்பியவர்தான் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு.!
சேலம் மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

By : Thangavelu

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "சேலம் மாவட்டத்தில் அனைத்து ஆக்சிஜன் படுக்கை வசதிகள் நிரம்பிவிட்டன. கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள். எனவே இறப்பு விபரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றார்.
மேலும் அவரிடம் அதிமுக அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வராததால்தான் 2வது அலை பரவியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, உலகளவில் எந்த நாட்டிலும் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வல்லரசு நாடுகளில் கூட கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றார்.
மேலும், கடந்த கால அதிமுக ஆட்சியில் தடுப்பூசி குறித்து மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்பினார். பிரதமர், முதலமைச்சர் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. ஏதோ தடுப்பூசி வந்துள்ளதாம் அதை சில டாக்டர்கள் மட்டும் போட்டுக்கொண்டனர் என்று கூறினார்.
அப்போது தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் பொதுமக்கள் அனைவரும் பயமின்றி தடுப்பூசியை போட்டுக்கொண்டிருப்பார்கள். அப்போது விட்டுவிட்டு முதலமைச்சராக மாறியதும் தடுப்பூசி போட்டுக்க சொல்கிறார் என்று குற்றம்சாட்டினார்.