விரைவில் தேர்தல் தேதி: பிப்ரவரி 25ல் தமிழகம் வருகிறது துணை ராணுவப்படை.!
விரைவில் தேர்தல் தேதி: பிப்ரவரி 25ல் தமிழகம் வருகிறது துணை ராணுவப்படை.!
By : Kathir Webdesk
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ள நிலையில், வருகின்ற பிப்ரவரி 25ம் தேதி மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகம் வரவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கி விட்டது. அதே போன்று தேர்தல் ஆணையம் தனது தரப்பிலான பணிகளை தொடங்கி விட்டது. வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, பூத் அமைப்பது மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிவது உள்ளிட்ட பணிகளை செய்து முடித்துள்ளது.இதனால் இந்த மாத இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அரசியல் திருவிழா களை கட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரும் பிப்ரவரி 25ம் தேதி மத்திய ராணுவப் படையினர் தமிழகம் வருகின்றனர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். இதில் 45 கம்பெனி படையினர் முதற்கட்ட வருகையில் இடம் பெறுவார் என கூறினார். ஒரு கம்பெனியில் குறைந்தது 150 வீரர்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது.