பறக்கும்படை வாகன சோதனையை ஆய்வு செய்த புதுக்கோட்டை ஆட்சியர்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
அதே போன்று புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6 நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடியிலும் கழிப்பறை மற்றும் குடிநீர், மின்சாரம் வசதி சரி செய்யப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தேர்தலுக்கு முன்பாக செய்யப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.