உடுமலை வனப்பகுதியில் யானைகள் மீது தாக்குதல் நடத்திய சிறுவர்கள்.!
திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் யானை கூட்டங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது தங்களுக்கு ஆபத்தை ஏற்படுவதாக எண்ணிய மக்கள், இளைஞர்களை வைத்து யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
By : Thangavelu
திருப்பூர் மாவட்டம், உடுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் மீது சில இளைஞர்கள் கற்களை வீசியும், கட்டையால் தாக்கி துன்புறுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் யானை கூட்டங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது தங்களுக்கு ஆபத்தை ஏற்படுவதாக எண்ணிய மக்கள், இளைஞர்களை வைத்து யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது போன்று சில நாட்களுக்கு முன்னர் யானைக்கூட்டம் ஒன்று திருமூர்த்தி வனப்பகுதியில் வலம் வந்துள்ளது. அப்போது யானைகளை பார்த்ததும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து யானைகள் மீது கற்கள் வீசியும், கட்டையால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்போது இளைஞர்கள் மீது, யானை கூட்டம் தாக்க வரும்போது சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆபத்தை உணராமல் இது போன்று விளையாடும் இளைஞர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.