தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நிலத்திற்கு இனி மதிப்பில்லை!
Encroaching properties in TN to lose their value
By : Muruganandham
தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நிலம் மற்றும் சொத்துகளின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பதிவுத்துறை சமீபத்தில் இந்த நிலங்களின் மதிப்பை முற்றிலுமாக குறைத்துள்ளது.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏரிகளின் நீர்வழிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளதால், அரசின் இந்த முடிவால், நூற்றுக்கணக்கான நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீர்வளம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, நீர்நிலைகளில் உள்ள நிலம் எவ்வளவு தனியாருக்குச் சொந்தமானது என்பதைக் காட்டும் தரவு எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். நீர்நிலைகள் என அடையாளம் காணப்பட்ட சர்வே எண்களின் பட்டியலில் அடுக்குமாடி குடியிருப்புகள், பல மாடி கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்பு பதிவு பதிவுகளில் முற்றிலுமாக குறைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்.
ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னர் தனியாருக்கு ஒதுக்கப்பட்ட நீர்நிலைகளில் உள்ள சொத்துக்களின் மதிப்பு பூஜ்ஜியமாக குறைக்கப்படுமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை என்று செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""நீர்நிலைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் சர்வே எண்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, நிலம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டது," என தெரிவித்தார்.
நீர்நிலைகளின் பெரும்பாலான ஆக்கிரமிப்பு பகுதிகள் பொறம்போக்கு நிலமாக என வகைப்படுத்தப்பட்டாலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வருவாய் மற்றும் நில நிர்வாகத் துறைகளின் பல்வேறு பிரிவுகளால் 1980 மற்றும் 1997 க்கு இடையில் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இது தவிர, கட்டுமானத்தை எளிதாக்கும் வகையில் நில வகைப்பாட்டை மாற்ற சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.