Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை - தொடரும் அவலம்!

ஆன்லைன் சூதாட்டத்தின் போது பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை - தொடரும் அவலம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Dec 2022 4:09 AM GMT

கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள ஒப்பிலிபாளையம் நகர சேர்ந்தவர் ராமசாமி என்பவர். இவருடைய மகன் சங்கர் பொறியாளராக இருக்கிறார். இவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார் என கூறப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைத்தது எனவும், நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நிலை காரணமாக அதன் மூலம் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை இழந்து இருப்பதால் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியான சூதாட்டத்தில் எப்படியாவது விட்ட பணத்தை திரும்ப வென்று விட்டால் நம் மீண்டும் ஜெயிக்கலாம் என்ற ஒரு முயற்சியில், கடன் வாங்கி ஆன்லைனில் தொடர்ந்து சூதாட்டம் விளையாடி வந்திருக்கிறார்.


மேலும் கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழக்க நேரிட்டது, இதன் காரணமாக அவர் சில நாட்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்திருக்கிறார். கடந்த 12ம் தேதி தனது பெற்றோரும் வேலை விஷயமாக வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்து அவர் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் அரையடுத்து தங்கினார். அறையில் இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனை கண்ட ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சிடைந்திருக்கிறார்கள். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது சார் விசாரணை மேற்கொண்டனர், அப்பொழுதுதான் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டு இருக்கிறது.


அதில் ஆன்லைன் விளையாட்டுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், ஆனால் அதை திருப்பிக் கொடுக்க முடியவில்லை, நண்பர்கள் என்னை மன்னிக்கவும் இவ்வாறு கடிதத்தில் இருந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார்? என்பதையும் நண்பர்கள் எவ்வளவு கடன் வாங்கினர்? என்பதில் குறிப்பிடவில்லை. பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட அவரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News