எடப்பாடி எழுப்பிய அந்த ஒரு கேள்வி... பதில் சொல்லாமல் மலுப்பும் தி.மு.க... நடந்தது என்ன?
தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள் பழக்கம் காரணமாக கொலைகள் அதிகமாகி வருகிறது.
By : Bharathi Latha
சட்டசபையில் உரையாற்றிய பிறகு வெளியில் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். குறிப்பாக இந்த பேட்டியின் போது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறும் பொழுது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அ.தி.மு.கவின் மிகப்பெரிய கூட்டணி கட்சியாக பா.ஜ.க இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தற்பொழுது போதைப் பொருள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எது கிடைக்கிறதோ, இல்லையோ மூலை முடிக்கிலெல்லாம் தற்பொழுது கஞ்சா போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை இல்லாத அளவில் போதைப் பொருட்கள் தமிழகத்தில் பெரும் அளவில் ஊடுருவி இருக்கிறது.
இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மேலும் அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் வராத பிரச்சனை கூட தி.மு.க ஆட்சியில் வந்திருக்கிறது. குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை பெரும் பூகம்பத்தை கிளப்பியது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சட்டசபையில் பேசும் பொழுது கூட இப்ராஹிம் ராஜா விழுப்புரம் கொலை வழக்கில் தீர்வு வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார். குறிப்பாக போதைப் பொருட்கள், கஞ்சா போன்றவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் தேவை என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar