Kathir News
Begin typing your search above and press return to search.

ஈரோடு: விவசாய குடும்பத்துக்கு விஷமாத்திரை கொடுத்த கொடூரம்.. பரபரப்பு தகவல்.!

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் கருப்பணன், இவரது மனைவி மல்லிகா, மகள் தீபா, தோட்டத்து வேலை செய்யும் பெண் குப்பாயி அம்மாள் ஆகியோர் கடந்த சனிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்துள்ளனர்.

ஈரோடு: விவசாய குடும்பத்துக்கு விஷமாத்திரை கொடுத்த கொடூரம்.. பரபரப்பு தகவல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  27 Jun 2021 2:22 PM IST

ஈரோடு அருகே கொரோனா சத்து மாத்திரை என்று விஷமாத்திரையை சாப்பிட்ட 4 பேரில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் திட்டமிட்டு கொலை அரங்கேற்றப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் கருப்பணன், இவரது மனைவி மல்லிகா, மகள் தீபா, தோட்டத்து வேலை செய்யும் பெண் குப்பாயி அம்மாள் ஆகியோர் கடந்த சனிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்துள்ளனர்.

அவர்களுடன் கப்பணனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் கல்யாண சுந்தரம் என்பவர் அங்கு இருந்துள்ளார்.அப்போது அங்கு ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் கொரோனா சிறப்பு வார்டில் இருந்து வந்துள்ளதாகவும், தன்னிடம் சத்து மாத்திரைகள் இருப்பதாக கூறி 4 பேருக்கும் கொடுத்துள்ளார்.





முதலில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த கல்யாணசுந்தரத்துக்கு மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பிறகு சாப்பிட்டுக்கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். மாத்திரையை கொடுத்த இளைஞர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மாத்திரையை சாப்பிட்ட 4 பேருக்கும் மயக்கம் மற்றும் வாந்தி எடுத்து கீழே விழுந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மல்லிகா உயிரிழந்துள்ளார்.

இது பற்றி அக்கம்பக்கத்தின் பார்த்து மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அடுத்தடுத்து தோட்டத்து வேலை செய்யும் குப்பாயி அம்மாள் மற்றும் தீபா ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். கருப்பணன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

4 பேரும் சாப்பிட்ட மாத்திரை சத்து மாத்திரையல்ல, பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தும் செல்பாஸ் மாத்திரை என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தோட்டத்தில் கருப்பணன் குடும்பத்தோடு பேசிக் கொண்டிருந்த கல்யாண் சுந்தரத்தையும், சபரி என்ற இளைஞனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.




கருப்பணனிடம், கல்யாணசுந்தரம் 13 லட்சம் ரூபாய்க்கு மேல் கடனாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கொடுத்த கடனை கருப்பணன் நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் குடும்பத்தோடு கொல்ல கல்யாணசுந்தரம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தனது உறவினர் மகனும் கல்லூரி மாணவன் சபரி என்ற இரைஞளை ஏற்பாடு செய்து, கொரோனா முகாமிலிருந்து வருவதாகக் கூறி சத்து மாத்திரைகள் என விஷ மாத்திரைகளை கொடுக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொடுத்த கடனை கேட்ட விவசாயி குடும்பத்தை விஷமாத்திரை கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News