ஈரோடு: விநாயகர் கோயில் முன்பும், இந்து முன்னணி நிர்வாகி கடை எதிரில் தொழுகை நடத்திய பங்களாதேஷ் முஸ்லிம்கள்!
விநாயகர் கோயில் முன்பும், இந்து முன்னணி நிர்வாகி கடை எதிரிலும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் தொழுகை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
விநாயகர் கோயில் முன்பும், இந்து முன்னணி நிர்வாகி கடை எதிரிலும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் தொழுகை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் கள்ளிப்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகியின் கடை எதிரிலும், விநாயகர் கோவில் முன்பு சாலையில் வேண்டும் என்றே பங்களாதேஷ் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு, இது போன்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அமைதியான முறையில் வியாபாரம் செய்து வரும் இந்து முன்னணி நிர்வாகி கடை முன்பாக கலவரம் செய்வதற்காக பங்களாதேஷ் முஸ்லிம்கள் இறக்கிவிடப்பட்டுள்ளதாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Source, Image Courtesy: Hindu Munnani