தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்: கலக்கத்தில் குடும்ப தலைவிகள்!
தமிழகத்தில் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக குடும்பத் தலைவிகள் கலக்கத்தில் உள்ளார்கள்.
By : Bharathi Latha
மற்ற மாநிலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்கள் போன்றவை சாலை மார்க்கமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பயணம் ஆகி வருகிறது. அவ்வாறு பயணமாகி வரும் பொழுது தேசிய நெடுஞ்சாலைகளினால் பராமரிக்கப்படும் சுங்க சாவடிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சுக்க சாவடிகளின் கட்டணங்கள் காரணமாக கொண்டு வரப்படும் பொருட்களின் மதிப்பும் ஏற்ற இறக்கங்கள் கொண்டு காணப்படுகிறது. சுங்க சாவடிகளின் கட்டணம் எப்பொழுது உயர்கிறதோ லாரிகள் மார்க்கமாக வரும் பொருட்களின் மதிப்பு உயர்கிறது.
அந்த வகையில் தற்பொழுது அடுத்த மாதம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்க சாவடிகளில் உள்ள 29 சுங்க சாவடிகளில் இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வு மூலமாக சென்னை புறநகரை பொருத்தமட்டில் பல்வேறு சுங்க சாவடிகளின் கட்டணங்கள் உயர்கிறது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடக, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடுதல் கட்டணமும் செலவாகிறது.
எனவே இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை அதிக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்ற அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்கிறது என்ற ஒரு அச்சத்தில் குடும்ப தலைவிகள் இருந்து வருகிறார்கள். லாரிகள் மூலமாக சாலை மார்க்கம் வாயிலாக வரும் வெங்காயம், தக்காளி போன்ற அன்றாட பயன்படுத்தும் சமையல் பொருட்களின் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Oneindia News