வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்.!
வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்.!
By : Kathir Webdesk
தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது கூடுதலாக 1 மணி நேரம் அதிகரிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) துவக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளது.
அவர்கள் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு மையங்கள் எண்ணிக்கை 95 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அதாவது இப்போது இருக்கிறதை விட கூடுதலாக 25000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்க எளிதாக அமையும். இவ்வாறு தேர்தல் ஆணையர் கூறினார்.