Begin typing your search above and press return to search.
உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.. முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்.!
உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.. முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்.!

By :
வருடம்தோறும் டிசம்பர் 23ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றும் விதமாக பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்து வரும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய விவசாயிகள் தின வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘உழந்தும் உழவே தலை’’ உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ‘‘தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை’’ அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story