Kathir News
Begin typing your search above and press return to search.

உடுமலையில் இழப்பீடு வழங்காமல் மின்கோபுரப்பணிகள்.. விவசாயிகள் போராட்டம்.!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மூங்கில் தொழுவு பகுதியில் மத்திய அரசு மற்றும் பவர்கிரிட் நிறுவனம் இறைந்து இடையார் பாளையம் முதல் மைவாடி வரை 400கேவி உயர்மின் கோபுர பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

உடுமலையில் இழப்பீடு வழங்காமல் மின்கோபுரப்பணிகள்.. விவசாயிகள் போராட்டம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 July 2021 1:49 PM IST

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மூங்கில் தொழுவு பகுதியில் மத்திய அரசு மற்றும் பவர்கிரிட் நிறுவனம் இறைந்து இடையார் பாளையம் முதல் மைவாடி வரை 400கேவி உயர்மின் கோபுர பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த பணிகளை செய்வதற்கு விவசாய நிலத்திற்கான இழப்பீடு எதுவும் தராமல், நிறுவனம் தரப்பில் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அப்பகுதியில் திரண்டனர்.

மின்கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு, நிலத்திற்கான உரிய இழப்பீட்டுத்தொகை கொடுத்த பிறகு நிலத்திற்குள் வரவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் ஒருசிலர் உயர்மின் கோபுரங்கள் மீது ஏறியும் கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News