திருச்செந்தூர்: பெண் பக்தரின் செல்போனை உடைத்த உதவி ஆணையர்? ஆக்ரோஷமான பெண் பக்தர்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண் பக்தரின் செல்போனை அதிகாரி கீழே போட்டு உடைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் பெண் பக்தர் அதிகாரியிடம் ஆக்ரோஷமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
By : Thangavelu
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண் பக்தரின் செல்போனை அதிகாரி கீழே போட்டு உடைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் பெண் பக்தர் அதிகாரியிடம் ஆக்ரோஷமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். தற்போது விடுமுறை என்பதால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். அது போன்று வருபவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், திருக்கோயிலின் சண்முகவிலாச மண்டபத்திற்குள் பக்தர்கள் நுழைய முடியாதபடி நாலாபுறமும் பேரிகார்டுகளை வைத்து தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால் உண்டியலில் காணிக்கை செலுத்த முடியாமல் பக்தர்கள் அவதியுற்று வருகின்றனர்.
இதனிடையே கோயிலின் உள் பிரகாரப்பகுதியில் பெண் பக்தர் ஒருவர் கோயில் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை அந்த அதிகாரி கீழே தள்ளிவிட்டு உடைத்ததாக கோபம் அடைந்த பெண், அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கிருந்த கோயில் செக்ரியூட்டிகள் அதிகாரியை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Source, Image Courtesy: Vikatan