Kathir News
Begin typing your search above and press return to search.

நியூஸ் 7 ஊடகம் மீது பாயும் நடவடிக்கை - அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை திசை திருப்பியது அம்பலம்!

Filed complaint with pibindiagov to take action against news7tamil

நியூஸ் 7 ஊடகம் மீது பாயும் நடவடிக்கை - அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை திசை திருப்பியது அம்பலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 March 2022 5:28 PM GMT

'பொறுப்பும் பொதுநலனும்' என்பதை கொள்கை குரலாக கொண்டு தொடங்கப்பட்ட நியூஸ் 7 ஊடகம், போலி செய்தி பரப்புவதில் முன்னிலை வகிக்கிறது. அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தேசிய குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அறிக்கையை, முறையாக படிக்காமல் செய்தி வெளியிட்டு, திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது.

நியூஸ்7தமிழ், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. விவி குரூப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள 'விவி மினரல்ஸ் குழு' முக்கிய உரிமையாளராக உள்ளனர். அலையன்ஸ் பிராட்காஸ்ட் எனும் நிறுவனப் பெயரின்கீழ், இந்த தொலைக்காட்சி அலைவரிசை செயல்படுகிறது.

சி. பி. ஐ விசாரணை நடந்து வரும் நிலையில், அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என நியூஸ் 7 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

பள்ளி மீது, முறையாக விசாரணை செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த குழந்தையை ஆணையம், காவல்துறையால் கடும் மன உளைச்சலில் இருக்கும் அந்தக் குடும்பத்தினரை சகஜ நிலைக்கு கொண்டு வர கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்ற ஒரு வரியை தவறாக வெளியிட்டுள்ளது நியூஸ் 7 தொலைக்காட்சி.




இந்த நிலையில் தவறான செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் மீது சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில், PIBஅலுவலகத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிவிட்டர் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கணக்கை முடக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News