Kathir News
Begin typing your search above and press return to search.

வேகமெடுக்கும் தஞ்சாவூர் கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை: தஞ்சாவூர் SP மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய உள்துறையிடம் புகார்!

Filed complaint with Union Home Affairs seeking disciplinary action

வேகமெடுக்கும் தஞ்சாவூர் கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை: தஞ்சாவூர் SP மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய உள்துறையிடம் புகார்!

MuruganandhamBy : Muruganandham

  |  21 Jan 2022 1:17 PM GMT

தஞ்சாவூரில் பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட மிஷனரி பள்ளி விடுதியின் வார்டனைக் கைது செய்துள்ளதாக திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை எனக் கூறிய, தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

முன்னதாக 17 வயது சிறுமியின் மரணம் குறித்து போலியான செய்திகளை பரப்புபவர்கள் மீது சிறார் நீதிச் சட்டம் மற்றும் சில ஐபிசி பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் ஜி ரவளி பிரியா எச்சரித்துள்ளார்.

ஜனவரி 9ஆம் தேதி மாணவி விஷம் குடித்ததாகவும், ஜனவரி 15 ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளி போலீஸாருக்கு அவரது பெற்றோரிடமிருந்து முதல் தகவல் கிடைத்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் ஐபிசி பிரிவு 305 (குழந்தையின் தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் பிரிவுகள் 75 (குழந்தையைக் கொடுமைப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

தஞ்சாவூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சிறுமியின் மரண வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்ததை தொடர்ந்து வார்டன் ரிமாண்ட் செய்யப்பட்டார். வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது," என்று அவர் கூறினார், மேலும் பாதிக்கப்பட்ட சிறார்களின் அடையாளம், புகைப்படம், வீடியோ, முகவரி அல்லது அவரது மரண அறிவிப்பை சமூக ஊடகங்களில் பரப்புவது அல்லது வெளிப்படுத்துவது குற்றம் என எச்சரித்தார்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயத்தால் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக பாஜகவினர் கூறினர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாஜக மகளிர் அணித் தலைவர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு சுதந்திரமான விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார். கட்டாய மதமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, "அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தை இயற்ற வேண்டும்" என்றார் அண்ணாமலை.

இந்த நிலையில், Legal Rights Protection Forumசார்பில் தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் கட்டாய மத மாற்றம், மன மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல், அதன் மூலம் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய வழக்குகளில் விசாரணை செயல்முறையை தவறாக வழிநடத்தியதற்காக தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News