Kathir News
Begin typing your search above and press return to search.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! யாரு மெஜாரிட்டி தெரியுமா?

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! யாரு மெஜாரிட்டி தெரியுமா?

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! யாரு மெஜாரிட்டி தெரியுமா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jan 2021 12:03 AM IST

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தனது பணியை துரிதப்படுத்தியுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர்.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்காளர்கள் உயர்ந்துள்ளனர். இதில் 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 பேர் புதிய வாக்காளர்கள். மாவட்டம் தோறும் ஆட்சியர்கள் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இதில் பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7 ஆயிரத்து 246 பேர் உள்ளனர். இந்த பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வாங்கிச்சென்று பொதுமக்களுக்கு அளித்து வருகிறது.

யாரேனும் பெயர் விடுப்பட்டிருந்தால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News