சோழர் காலத்து சிலைகள் மற்றும் தஞ்சை ஓவியங்கள் பறிமுதல்!
சோழர் காலத்தை சேர்ந்த ஏழு சிலைகள் மற்றும் தஞ்சை ஓவியங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
By : Bharathi Latha
சென்னையில் ராஜராஜன் சோழன் காலத்தைச் சேர்ந்த ஏழு வெண்கல சிலைகள் மற்றும் இரண்டு பழங்கால தஞ்சை ஓவியங்களை தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். மேலும் இந்த புதிய சிலைகள் அமெரிக்க வாழ் இந்தியர் வீட்டில் தான் தற்போது சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கின்றது. ராஜா அண்ணாமலை பகுதியை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் வீட்டில் சிறை கடத்த தடுப்பு பிரிவு போலீசார் இத்தகைய சிலைகளும் தற்போது வீட்டில் மீட்டு இருக்கிறார்கள்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்க வாழ் இந்தியர் வீட்டில் சிலைகளை மீட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. உரிய அவகாசம் கேட்டும் சிலைகள் மற்றும் ஓவியங்களுக்கு உரிய உரிமையாளர் ஒப்பந்த ரசீதை அவர் சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக இத்தகைய சிலைகள் மற்றும் ஓவியங்களை அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்ததாகவும் தெரிய வருகிறது. இதன் காரணமாக அந்த சிலைகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த சிலைகள் மற்றும் ஓவியங்கள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை? எங்கிருந்து இது கொண்டுவரப்பட்டது? என்பது தகவல் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலையத் துறையிடம் விரைவில இந்த சிலைகள் மற்றும் ஓவியங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தற்போது கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Polimer News