Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 5 கோடி பேருக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட தடுப்பூசி முதல் டோஸ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுக்கும் விதமாக அனைவருக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசியை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வரையில் 5 கோடி பேருக்கு வெற்றிகரமாக முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 கோடி பேருக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட தடுப்பூசி முதல் டோஸ்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Dec 2021 12:40 PM GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுக்கும் விதமாக அனைவருக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசியை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வரையில் 5 கோடி பேருக்கு வெற்றிகரமாக முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் பெரும் பேரழிவை அளித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 5 கோடியே 1 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது. அடுத்து 2வது தவணையாக 3 கோடியே 87 லட்சத்து 58 ஆயிரத்து 232 பேருக்கு போடப்பட்டுள்ளது. இன்னும் 1.70 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். அதற்கான பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Times Of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News