கன்னியாகுமரி மீன் மார்க்கெட்டில் காற்றில் பறக்கவிட்ட சமூக இடைவெளி.!
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்தை தவிர மற்ற அனைத்து வாகனங்களும் சென்று கொண்டேதான் உள்ளது.

By : Thangavelu

சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் சாலைகளில் சென்று வருகின்றனர். நோயின் தன்மையை உணராமல் இப்படி சுற்றித்திரியும் மக்களால் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு படுக்கை வசதிகள் நிரம்பி வழிகிறது. அதே சமயம் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் கைவிட்டு செல்கின்றர். அது போன்ற உடல்களை தன்னார்வலர்கள் முன்வந்து அடக்கம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் திருவிழா கூட்டம் போன்று மீன் வியாபாரம் நடைபெறுகிறது. அங்கு சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை. இந்த கொடுமையெல்லாம் அரங்கேறுவது அரசு மீன்பிடி துறைமுகத்தில்.
மீன்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் கண்டு கொள்வதாக தெரியவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத கடைகளின் முன்பு வட்டங்களை போட்டு செல்லும் அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏனோ. பொறுப்பில்லாமல் இருக்கும் அதிகாரிகள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.