Kathir News
Begin typing your search above and press return to search.

நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்: உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள்.!

மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு உற்சாகமாக சென்றனர்.

நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்: உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Jun 2021 8:21 AM IST

மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு உற்சாகமாக சென்றனர்.

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோரப்பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடிக்க உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்.




இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மீனவர்களும் கடலுக்குப் புறப்பட்டு சென்றனர். ஊரடங்கால் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீனவர்கள் தங்களின் தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்கின்றனர்.

கொரோனா காலக்கட்டத்தில் மீனவர்கள் மிகவும் சிரமப்பட்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். தற்போது தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீனவர்கள் சென்றிருப்பது அவர்களின் குடும்பத்தார்களிடையே மகிழ்ச்சியே ஏற்படுத்தியுள்ளது. புதிய மீன் இன்னும் ஒரு சில நாட்களில் வரத்து தொடர்ந்தால் மீன்களின் விலையும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News