Kathir News
Begin typing your search above and press return to search.

5 ஆண்டுகளாக வறண்ட பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. உற்சாகமாக கண்டுகளிக்கும் பொதுமக்கள்.!

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை வெள்ளாமைக்கு போதுமான நீர் கிடைக்கும் என நம்புகின்றனர். ஆந்திரா அரசு கட்டிய தடுப்பணையால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளாக வறண்ட பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. உற்சாகமாக கண்டுகளிக்கும் பொதுமக்கள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 July 2021 5:39 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை மக்கள் உற்சாகமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று இரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணாக புல்லூரில் ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணையை தாண்டி பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அம்பலூர் பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேட்டுப்பாளையம், உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக வறண்டு கிடந்த பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை வெள்ளாமைக்கு போதுமான நீர் கிடைக்கும் என நம்புகின்றனர். ஆந்திரா அரசு கட்டிய தடுப்பணையால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News