ஜிம் ராமலிங்கத்தின் கொலை வழக்கில் கைதான 10 பேருக்கும் ஜாமின் மறுப்பு - நீதிமன்றம் அதிரடி!
மதமாற்றத்தை எதிர்த்த நபரை கொலை செய்த வழக்கில் கைதான 10 பேருக்கு ஜாமின் வழங்க மறுப்பு.
By : Bharathi Latha
சென்னையில் மத மாற்றத்தை தட்டிக் கேட்ட பா.ம.க பிரமுகர்கள் படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு சென்னை உயர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. கும்பகோணம் அருகில் உள்ள திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் ஹிந்து சமயத்தைச் சேர்ந்தவர், வேறு மதத்திற்கு மாற்றுபவருக்கு இவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2019 பிப்ரவரியில் மகனுடன் மினி லாரியில் வீடு திரும்பிய ராமலிங்கத்தை காரில் வந்த சிலர் வழிமுறைத்தனர் ராமலிங்கத்தின் கண்களில் மிளகாய் பொடியை வீசி கத்தியல் குத்தி படுகொலை செய்து இருக்கிறார்கள்.
திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக 18 பேருக்கு எதிரான வழக்கு பதிவு செய்யப்பட்டது இதில் 13 பெயர் கைது செய்யப்பட்டனர் ஐந்து பெயர் தற்போது தடைபடுவாய்க்கி உள்ளனர் இவ்வளத்தில் இறுதி அறிக்கை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது ஜாமின் கோரி கைது செய்யப்பட்ட 10 பெயர் மனுதாக்கல் செய்தனர் இவர்களுடைய மனு தாக்கல் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி பிரகாஷ் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் அவர்கள் ஆஜராகி இருந்தார் விசாரணை நீதிபதியின் அறிக்கை மற்றும் ஆவணங்களை பார்க்கும் பொழுது பாதுகாக்கப்பட்ட சாட்சிகள் முதலில் விசாரிக்க படி வற்புறுத்தாமல் விசாரணையை தொடர குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டிருப்பது தெரிய வந்தது. எனவே இந்த வழக்கு போதுமான தகுதிகள் இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar News