சிறையில் உடல்நலக்குறைவு.. முன்னாள் நீதிபதி கர்ணன் மருத்துவமனையில் அனுமதி.!
சிறையில் உடல்நலக்குறைவு.. முன்னாள் நீதிபதி கர்ணன் மருத்துவமனையில் அனுமதி.!
By : Kathir Webdesk
சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதியாகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கர்ணன். இவர் அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் வழக்கறிஞர்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில், 2 முறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கர்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கர்ணனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் திடீரென கர்ணணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவரை சிறைத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்படக் என்ன காரணம் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.