1027 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி! பொள்ளாச்சியில் துணை சபாநாயகர் வழங்கினார்!
1027 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி! பொள்ளாச்சியில் துணை சபாநாயகர் வழங்கினார்!

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. 2019, 20 ஆண்டுக்கான மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.
அதே போன்று பொள்ளாச்சியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட்ட பள்ளிகளில் பயின்ற 1027 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தணிகைவேல், கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், நகர கூட்டுறவு வங்கி தலைவர் விஜயகுமார், மாவட்டக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரன், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முருகேஷ், மாரியம்மாள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சொர்ணமணி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.