குப்பை போல் குவிந்து கிடக்கும் இலவச சைக்கிள்கள் - இதுதான் இலவச திட்டத்திற்கு மரியாதையா?
மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் கவனிக்கப்படாமல் குப்பை போல் ஓரமாக போடப்பட்டு வைத்திருக்கும் விவகாரம் மாணவ, மாணவிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By : Mohan Raj
மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் கவனிக்கப்படாமல் குப்பை போல் ஓரமாக போடப்பட்டு வைத்திருக்கும் விவகாரம் மாணவ, மாணவிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலவசங்கள் தேவை, இலவசங்களால் தான் மக்கள் வளர்கிறார்கள் என தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் கட்சியினர் பேசி வருகையில் தற்பொழுது மாணவிகளுக்கு இலவசமாக கொடுக்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் கவனிக்கப்படாமல் குப்பை போல் குவிந்து கிடக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு மாணவிகளுக்கு வழங்கப்படும் சைக்கிள்கள் வெயிலிலும், மழையிலும் கவனிப்பாரற்ற அப்படியே கிடக்கின்றது. அதனை வழங்கக்கூட தமிழக அரசால் முடியவில்லை இலவசத்திற்கு ஆதரவாக பேசும் இவர்கள் இலவச பொருட்களை நடத்தும் விதம் இவ்வாறு தான் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.