சென்னை குடிசை வாசிகளுக்கு இலவச உணவு.. முதலமைச்சர் பழனிசாமி.!
சென்னை குடிசை வாசிகளுக்கு இலவச உணவு.. முதலமைச்சர் பழனிசாமி.!
By : Kathir Webdesk
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் குடிசைப்பகுதிகளில் தேங்கியுள்ளது.
மழை வெள்ளத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கால்நடைகள் ஏராளமாக உரிழிந்துள்ளது. இதற்கு உரிய இழப்பீடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் குடிசைப்பகுதிகள் கடுமையான வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. இதனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அது போன்று உள்ளவர்கள் சாப்பிடுவதற்காக முதலமைச்சர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சென்னை குடிசைப்பகுதி மக்கள் அனைவருக்கும் வருகின்ற 13ம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் அம்மா உணவகங்கள் மூலமாக விநியோகம் செய்யப்படும்.
மேலும், சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மாநகராட்சி இடங்களில் இலவச உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.