கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.. முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு.!
கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.. முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு.!
By : Kathir Webdesk
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடைபெறுகிறது. இந்த நிழச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகின்ற 24ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 123 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் இன்று கோவை சிறுவாணி சாலை, பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. இதில் 123 ஜோடிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாங்கல்யம் எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இதில் பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திருமணம் முடிந்த பின்னர் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. மேலும், திருமண ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வருகையால் கோவையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.