தமிழகத்தை விரும்பும் பிரான்ஸ் தொழில் நிறுவனங்கள் - தொடர்ந்து ஸ்கோர் செய்யும் முதல்வர்.!
தமிழகத்தை விரும்பும் பிரான்ஸ் தொழில் நிறுவனங்கள் - தொடர்ந்து ஸ்கோர் செய்யும் முதல்வர்.!
By : Muruganandham M
தமிழகத்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே அதிக அளவில் வியாபாரத் தொடர்புகள் இருந்து வருகின்றன. இந்தியாவில் பிரான்ஸ் தொழில் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்துள்ள முதன்மை மாநிலம் தமிழகம்தான். அதே போல தமிழகத்தில் கரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ சாதனங்களை பிரான்ஸ் தொழில் நிறுவனங்கள் உருவாக்கி கொடுத்தன. குறிப்பாகரெனால்டு நிறுவனம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் பெரிதும் உதவியது.
எங்கு தொழில் தொடங்குவதற்கு இணக்கமான, சாதகமான சூழல் நிலவுகிறதோ அங்கு தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். அந்த வகையில் எங்களின் தேர்வு பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. தற்போது தொழில்துறை, R&,D முதலான துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகத்தை தேர்ந்தெடுத்துள்ளது பிரான்ஸ். அந்நாட்டு தூதருடனான சந்திப்பிற்குப் பிறகு முதல்வர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை வந்துள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன், தமிழகத்துக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதும், பிரான்ஸ் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் எனது தமிழக வருகையின் முக்கிய நோக்கம்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து மேற்படிப்புக்காக எங்கள்நாட்டுக்கு 10 ஆயிரம் மாணவர்கள்வந்தனர். வரும் காலத்தில் இதுகணிசமாக உயரும் என நம்புகிறேன். தற்போது தமிழகத்தில் 140 பிரான்ஸ் நிறுவனங்கள் உற்பத்தி துறையில் முதலீடு செய்துள்ளன என்று கூறியுள்ளார்.