Kathir News
Begin typing your search above and press return to search.

குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் நிறுத்தி வைப்பு.. சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.!

குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் நிறுத்தி வைப்பு.. சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.!

குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் நிறுத்தி வைப்பு.. சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Dec 2020 12:43 PM GMT

சென்னையில் குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் தினசரி 5 ஆயிரம் டன் அளவிற்கு குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சென்னையில் குப்பை மேலாண்மை சரிவர இயங்கவில்லை என மக்கள் புகார் அளித்து வரும் நிலையில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என தனித்னியே குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையில் குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News