Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் ஆதரவற்ற சிறுமிகளை குறிவைத்து காதல் வலைவீசும் வாலிபர்கள்!

சென்னையில் ஆதரவற்ற சிறுமிகளை குறிவைத்து காதல் வலைவீசும் வாலிபர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  14 March 2022 7:55 AM GMT

சென்னையில் தற்போது ஆதரவற்ற நிலையில் உள்ள சிறுமிகளை குறி வைத்து காதல் வலைவீசும் வாலிபர்கள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துள்ளது. செல்போன்கள் இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடைபெறுவதில்லை. கொரோனா தொற்றுக்கு பின்னர் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் சிறுவர், சிறுமிகளிடம் செல்போன் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. இதனால் குழந்தைகளின் உலகமே செல்போன் என்கின்ற நிலை உருவாகிவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் ஆசிரியர்கள் பலரும் பெண் குழந்தைகளிடம் ஆன்லைன் வகுப்பை சாதமாக்கி எல்லை மீறிய பல்வேறு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ, மாணவிகள் தவறான வலைதளங்களையும் தேட தொடங்கிவிட்டனர். பார்க்க கூடாதவைகளை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீப காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்கதையாக மாறிவிட்டது. இது போன்று பாதிக்கப்படும் ஏராளமான சிறுமிகள் ஆதரவற்றகர்களாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது. தற்போதைய இளைஞர்கள் அதிகம் பேர் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவழிக்கின்றனர். அதே சமயம் ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபடும் மாணவ, மாணவிகளும் சமூக வலைதளம் பக்கம் வருகின்றனர். அது போன்று இணையும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் அதிகரிக்கவே செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குல்கள் 70 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதில் போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் சிறுமிகளை அதிகம் பேர் இது போன்ற பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்களை குறிவைத்து அவர்களை இளைஞர்கள் காதல் வலைவீசி அதன் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். இது போன்ற இளைஞர்களை போக்சோவில் கைது செய்தாலும் பின்னர் வெளியில் வந்து மீண்டும் அதே தவறை செய்கின்றனர். அது போன்ற இளைஞர்களின் பெற்றோர்கள் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.

Source: Maalaimalar

Image Courtesy: BBC

Next Story
கதிர் தொகுப்பு
Trending News