பூமியின் அடியில் பதுக்கப்பட்ட அம்மன் சிலை மீட்பு - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி!
பூமியின் அருகில் பதுக்கப்பட்ட அம்மன் சிலையை மெட்டல் டிடெக்டர் கொண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்பு.
By : Bharathi Latha
சுவாமி சிலைகள் மீட்பு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தான் சுவாமி சிலைகளை பூமியின் அடியில் பதுக்கி வைத்து இருக்கிறார்கள். இந்த சிலைகளை தற்பொழுது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் எனும் கருவியின் உதவியுடன் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதன் பெயரில் இந்த வழக்கின் கீழ் மூன்று பெயர் கைது செய்யப்படும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் சுவாமி சிலைகளை வீட்டிலில் குழியை தோண்டி புதைத்து வைத்திருக்கிறார்கள்.
ராஜ் புற சத்யா நகர் பகுதிகளில் வீடுகளில் தனிப்பட்ட கொள்கையை தோண்டி அதில் ஐம்பொன் சிலையை கடத்தி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இடம் பெயரில் போலீசார் அங்கு ரகசியமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டு உள்ளார்கள். இந்த ஆய்வின் பொழுது வீட்டில் உள்ள அந்த ரகசிய குழியானது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பின்பு அந்த புள்ளியை குழியை தோண்டி பார்க்கும் பொழுது அதில் ஐந்து ஐம்பொன் சிலைகள் மற்றும் மூன்று சுவாமி சிலைகள் பதிக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட காய்கறி விற்கும் வியாபாரியான பாலாஜி மற்றும் சிலை கடத்தலுக்கு உதவியாக இருந்த அவருடைய இரண்டு கூட்டாளிகளான தினேஷ் மற்றும் முரளி ஆகிய மூன்று பெயரை போலீசார் தற்பொழுது கைது செய்து இருக்கிறார்கள். இவர்களிடம் எந்த ஒரு ரசீதும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பான வகையில் சிலைகளை கடத்தி வீட்டின் அருகில் புதைத்து வைக்கிறார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Polimer News