நாகையில் 1456 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.!
நாகையில் 1456 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.!
By : Kathir Webdesk
நாகையில் தமிழக அரசின் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கூடுதல் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஒ.எஸ். மணியன் கலந்து கொண்டு 1456 பயனாளிகளுக்கு 10 கோடியே 94 லட்சத்து 48 ஆயிரத்து 656 ரூபாய் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கி பேசியதாவது:
மறைந்த முதலமைச்சர் அம்மாவின் உயரிய திட்டமான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழகத்திலே பெற்றோர்களிடமும் சகோதரிகளிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொட்டில் குழந்தை திட்டம், பெண் கல்வி, பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவிகித இடஒதுக்கீடு என பல்வேறு முக்கிய திட்டங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் உமையாள், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் இளவரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.