Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று தங்கத்தின் விலை ரூ.152 குறைவு.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலையில் கிராமுக்கு ரூ.19 குறைந்துள்ளது.

இன்று தங்கத்தின் விலை ரூ.152 குறைவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 July 2021 12:12 PM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலையில் கிராமுக்கு ரூ.19 குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் சென்றது. கடந்த 6ம் தேதியில் இருந்து ரூ.36 ஆயிரத்திலேயே நீடிக்கிறது. தங்கம் இன்று விலை சற்று குறைந்தால் அதற்கு அடுத்த நாளே மீண்டும் உயரும். இதே நிலைதான் நீடித்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ரூ.36,120க்கு விற்பனையான தங்கம் நேற்று முன்தினம் ரூ.36,200 ஆக அதிகரித்தது. நேற்றும் இதே விலையே தொடர்ந்தது.


இந்நிலையில், இன்று (ஜூலை 12) தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 19 குறைந்து ரூ.4,506க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.4,506க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மேலும், வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News