Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று தங்கத்தின் விலை ரூ.64 குறைவு.!

இன்று தங்கத்தின் விலை ரூ.64 குறைவு.!

இன்று தங்கத்தின் விலை ரூ.64 குறைவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Feb 2021 11:24 AM GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டிருந்தபோது, தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்த்திராத வகையில் ரூ.43 ஆயிரத்தை தொட்டது. அப்போது அனைத்து தொழில்துறையினரும் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனிடையே படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,364க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912க்கு விற்பனையாகிறது. அதே போன்று வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00 க்கு விற்பனை வெற்றப்படுகிறது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News