'டீ' குடிக்க ரூ.100, நெல் மூட்டைக்கு ரூ.40: விவசாயிகளின் ரத்தத்தை லஞ்சமாக உறிஞ்சும் தமிழக அதிகாரிகள்!
By : Thangavelu
நாகப்பட்டினம் மாவட்டம், பிரதாபராமாபுரம் நேரடி கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் ஒருவர் விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சமாக பெறும் வீடியோ வெளியாகி பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடி முடிந்தது. இதனால் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் வேகமாக நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்களை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமாபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் என்பவர் விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை வாங்குவதற்காக லஞ்சம் கேட்கிறார். இதற்கான வீடியோவை அங்குள்ளவர்கள் எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
அதே போன்று பொய்கை நல்லூரை சேர்ந்த விவசாயி இளங்கோ என்பவர் தனது நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையம் சென்றிருந்தார். அப்போது அவரிடம் ஒரு மூட்டைக்கு ரூ.40 என்று ரூ.1940 ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதனை கேட்டு இளங்கோ அதிர்ச்சியடைந்தார். எழுத்தர் பாஸ்கர் கேட்ட லஞ்ச பணத்தை விவசாயி வழங்கினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு டீ வாங்கி கொடுப்பதற்காக தனியாக ரூ.100 கேட்டுள்ளனர். அதில் விவசாயி மற்றும் ஊழியர்கள் பேசும் வீடியோ வெளியாகியிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu