அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத அவலம் - உடனடியாக களத்தில் இறங்கி மருத்துவரை நியமிக்க வைத்த பா.ஜ.க
ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் இரவு நேரம் மருத்துவர்கள் இல்லாததை அறிந்த பாஜக இளைஞரணி செயற்குழு உறுப்பினர்கள் கொடுத்த மனுவினால் நிகழ்ந்த மாற்றம்.
By : Bharathi Latha
ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லை என்பது நவம்பர் 29ம் தேதி அன்று தெரிய வந்தது. ரங்கராசு என்பவர் 10:30 மணிக்கு மேல் கால் வீக்கம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று இருக்கிறார்.அங்கு செவிலியர் மட்டும் தான் பணியில் இருந்திருக்கிறார். அவர்தான் ஊசி போட்டு, மாத்திரையும் கொடுத்து இருக்கிறார். மேலும் அவர் கொடுத்த ஒரு தகவலின் பெயரில் தான் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க இளைஞரணி செயற்குழு உறுப்பினர் விக்னேஷ் குமார் என்பவர் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
இங்கு இரவு நேர மருத்துவர்கள் இல்லை என்று தெரிவித்தார். சுமார் ஆறு முதல் ஏழு மருத்துவர்கள் இருந்தால் மட்டுமே இரவு பணியில் மருத்துவர் பணியமர்த்த முடியும் என்று அரசாணை இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கும் பொழுது இரவு நேர மருத்துவமனை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்ட பொழுது மருத்துவர் எந்த ஒரு சரியான பதிலையும் தரவில்லை. இதன் காரணமாக ஜலகண்டாபுரம் மற்றும் மதுரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இந்த மருத்துவமனை மிகவும் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து கொண்ட பிறகு பா.ஜ.க இளைஞரணி செயற்குழு உறுப்பினர்கள் இதற்கு தகுந்த ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள்.
மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் விக்னேஷ் குமார் மனு கொடுத்தார். ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நவம்பர் 30 அன்று இணை செயலாளர் சுகாதார பணிகள் சேலம் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அந்த அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர்கள் இல்லை. அதனால் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக உயிர் இழப்புகள் ஏற்பட்டன. சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் பேரூராட்சி ஜனவரி 2 ஆம் தேதி அன்று இரவு நேர மருத்துவர் நியமிக்கபட்டு உள்ளார்கள். இன்று நமது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் விக்னேஷ் குமார் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் திரு ஐயப்பராஜு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவருக்கு நன்றி தெரிவித்தனர் மற்றும் அந்த நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நங்கவள்ளி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Input & Image courtesy: