அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி: சாலையில் பிரசவம் பார்த்த மக்கள்!
அரசு மருத்துவமனையில் துணைக்கு யாரும் இல்லாததால் கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
துணைக்கு யாரும் இல்லாததால் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் வலியினால் துடித்து இருக்கிறார். மேலும் இவருக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்து இருக்கிறார்கள் அங்கு இருந்த மக்கள். இவர் நிறைமாத கர்ப்பிணியாக சாலையிலேயே தன்னுடைய குழந்தையை பெற்று இருக்கிறார். கர்ப்பிணி பெண் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று சமயத்தில் அந்த பெண்ணுடன் யாரும் துணைக்கு இல்லை என்று காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அருகிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலையில் அவர் துடித்திருந்தார், இந்த பெண்ணை பார்த்து சிலர் போர்வை வைத்து மறைத்து பிரசவம் பார்த்து இருக்கிறார்கள். அரசு விதிகளை நிபந்தனைப்படி நாங்கள் செய்ய மாட்டோம் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் கர்ப்பிணி பெண்களின் குடும்பத்தினர் கட்டாயம் அவர்களுடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக துணைக்கு யாரும் இல்லை என்று நிலையில் நிலை மாத கர்ப்பிணிப் பெண்ணிற்கு தற்பொழுது பிரசவம் பார்க்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மறுத்து இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு வழியிலேயே பிரசவ வலி வந்ததன் காரணமாக அங்கிருந்து மக்கள் சாலையிலேயே அவருக்கு பிரசவம் பார்த்து இருக்கிறார்கள். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
Input & Image courtesy: Polimer News