திருச்செங்கோடு அரசு மருத்துவமனை அவலம் - தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் சம்பள குறைவு காரணமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
By : Bharathi Latha
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சென்னையில் இருந்து இயங்கும் ஒப்பந்த நிறுவனம் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களை நியமித்து உள்ளது. திருச்செங்கோடு 13 தூய்மை பணியாளர்களை பணி அமர்த்தியது. ஆனால் கடந்த ஏழு வருடங்களாக பணியாற்றி வரும் நபர்கள் 7 பேர் மட்டும்தான். மீதம் உள்ள நபர்கள் எங்கு சென்றார்கள் என்பதை தெரியவில்லை.
அது மட்டும் அல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்களுக்கு ஒதுக்கி உள்ள 700 ரூபாய் சம்பளத்தை வழங்காமல், வெறும் 280 மட்டுமே நிர்வாகம் வழங்குவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள. 13 பேர் செய்ய வேண்டிய வேலையை ஏழு பேர் மட்டுமே பணியமரத்து அதிக வேலை வாங்குவதாகவும், அதிகப்படியான பெண்கள் வேலை செய்யும் நிலையில் உடைமாற்றக் கூட அறை இல்லாத நிலை இருப்பதாகவும் அவர்கள் தங்களுடைய குறைகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
தங்களுக்கு இதுவரை அரசு வழங்கிய ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். சம்பளம் உயர்த்தி கேட்டால் வேலையை விட்டு நின்று விடுங்கள். புதிய வேலை ஆட்களை பணியமர்த்துவோம் என்று கூறி மிரட்டி இருப்பதாகவும் பணியாளர்கள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழு பணியாளர்கள் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: