Kathir News
Begin typing your search above and press return to search.

நாடக கலைஞர்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை அறிவிப்பு.!

நாடக கலைஞர்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை அறிவிப்பு.!

நாடக கலைஞர்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை அறிவிப்பு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Nov 2020 7:18 PM GMT

தமிழகத்தில் நாடக கலையை நம்பி ஏராளமானோர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக நாடகங்கள் எதுவும் இன்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தனர்.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் தங்களது பணியை செய்ய தொடங்கியுள்ளனர். அது போன்றவர்கள் வெளியூர்களில் ஏதாவது நாடகத்திற்கு செல்ல வேண்டும் ஆனால் பேருந்தை நம்பி இருக்கும் சூழல் இருந்து வருகிறது. அது போன்றவர்கள் தங்களின் பொருட்களை பேருந்தில் கொண்டு செல்லும்போது தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், நாடக கலைஞர்கள், வாத்தியங்களை அரசுப் பேருந்தில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாடக கலைஞர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News