Kathir News
Begin typing your search above and press return to search.

'இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டோம்' என மன்னிப்பு கடிதம் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் - ஏன் தெரியுமா?

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து மதிப்பிட்ட அரசு ஆசிரியர்கள் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டோம் என அரசு தேர்வு துறைக்கு மன்னிப்பு கடிதம் எழுதியது பரபரப்பாகியுள்ளது.

இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என மன்னிப்பு கடிதம் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் - ஏன் தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  21 July 2022 11:20 AM GMT

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து மதிப்பிட்ட அரசு ஆசிரியர்கள் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டோம் என அரசு தேர்வு துறைக்கு மன்னிப்பு கடிதம் எழுதியது பரபரப்பாகியுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பிறகு மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதிய மாணவர்கள் பலர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர், விடைத்தாள் நகல்களை வாங்கி பார்த்த பொழுது வாங்கிய மதிப்பெண்களை விட ஆசிரியர்கள் குறைத்து வழங்கியது தெரிய வந்தது.

இந்த விவகாரத்தை பெற்றோர்கள் தேர்வு கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து அலட்சியமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் அதனை மேற்பார்வை செய்த அலுவலர்கள் என 80 பேரை விசாரணைக்கு அழைக்க தேர்வுத்துறை திட்டமிட்டது. இன்று 50 ஆசிரியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அவர்களிடம் தேர்வுத் துறை இணை இயக்குனர் செல்வகுமார் விசாரணை நடத்தினார்.


அப்போது மாணவர்கள் விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டது குறித்து இயக்குனர் கேள்வி எழுப்பிய பொழுது 'இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டோம்' என மன்னிப்பு கடிதங்களை எழுதி கொடுத்துவிட்டு ஆசிரியர்கள் சென்றனர்.

ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக நிற்கும் நிலையில் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையும் அரசு பள்ளி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற கூட்டல் குளறுபடிகள் தேர்வு குளறுபடிகளில் ஈடுபடுவது பள்ளி கல்வித்துறையின் இயலாமையை பட்டவர்த்தனமாக அப்படியே படம் பிடித்து காட்டுகிறது.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News