Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து சமயம், கடவுள்கள் குறித்து அவதூறாக பேசும் கயவர்கள் மீது சேகர்பாபு நடவடிக்கை எடுப்பாரா - அர்ஜூன் சம்பத் விளாசல்

இந்து சமயம், கடவுள்கள் குறித்து அவதூறாக பேசும் கயவர்கள் மீது சேகர்பாபு நடவடிக்கை எடுப்பாரா - அர்ஜூன் சம்பத் விளாசல்
X

ThangaveluBy : Thangavelu

  |  5 Jun 2022 5:32 AM GMT

சிதம்பரம் கோயில் நிர்வாகம் மற்றும் ஆதீனங்களின் பாரம்பரியம் ஆகியவற்றில் அறநிலையத்துறை தலையிடாது என்று அமைச்சர் சேகர்ப்பாபு கூறினார். இதற்கு இந்து மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு நேற்று காலை வருகை புரிந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதீன மடாதிபதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, சைவத்துடன் தமிழை வளர்க்கும் பணியில் தொன்¬மான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளது. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும் அதே நேரத்தில் பாரம்பரியங்களில் இந்து அறநிலையத்துறையும் தலையிடாது என்றார்.

இந்நிலையில், இது குறித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் கோவில் நிர்வாகம் மற்றும் ஆதீனங்களின் பாரம்பரியம் ஆகியவற்றில் அறநிலையத்துறை தலையிடாது என அமைச்சர் திரு.சேகர் பாபு கூறியதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது, அதுபோல் இந்து சமயம், கடவுள்கள் குறித்தும் அவதூறாக பேசும் கயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் திரு.சேகர்பாபு. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News