வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்.!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். அதில் அரசு வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறினார். இதற்கான மசோதாவையும் தாக்கல் செய்தார்.
இதனை ஆளுநர் பன்வாரில் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதற்கான கோப்புகளில் ஆளுநர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இதற்கான ஆணை தமிழக அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக முயற்சி எடுத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வன்னியர்கள் அனைவரும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இதனை சட்டமசோதாவாக நிறைவேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி தங்களது நன்றியை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.