Begin typing your search above and press return to search.
கொரோனா வைரஸ் குறைந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல்.. ஆளுநர் உரையில் தகவல்.!
பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்கு புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் அமைக்கப்படும்.

By : Thangavelu
திமுக அரசு அமைந்த பின்னர் முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அப்போது சட்டப்பேரவையில் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று குறைந்தவுடன் 9 மாவட்டங்களிலும் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
மேலும், பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்கு புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் அமைக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு உற்பத்தி திறனும் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
